×

இலங்கையுடன் இன்று வங்கதேசம் பலப்பரீட்சை

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், பிரிஸ்டல் கவுன்டி கிளப் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் மோதுகின்றன. கருணரத்னே தலைமயிலான இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. அடுத்து ஆப்கானிஸ்தானுடன் நடந்த போட்டியில் டி/எல் விதிப்படி 34 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. பாகிஸ்தான் - இலங்கை அணிகளிடையே பிரிஸ்டல் மைதானத்தில் நடக்க இருந்த லீக் ஆட்டம், கனமழை காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இலங்கை அணி 3 போட்டியில் 3 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், வங்கதேச அணி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று பின்தங்கியுள்ளது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் வென்று புள்ளிப் பட்டியலில் முன்னேறும் முனைப்புடன் இரு அணிகளும் வரிந்துகட்டுகின்றன.

வங்கதேசம்: மஷ்ராபி மோர்டசா (கேப்டன்), அபு ஜாயித், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மகமதுல்லா, மெகதி ஹசன் மிராஸ், முகமது மிதுன் (விக்கெட் கீப்பர்), முகமது சைபுதின், மொசாடெக் உசேன், முஷ்பிகுர் ரகிம் (விக்கெட் கீப்பர்), முஸ்டாபிசுர் ரகுமான், ருபெல் உசேன், சப்பிர் ரகுமான், ஷாகிப் அல் ஹசன், சவும்யா சர்க்கார், தமிம் இக்பால். இலங்கை: திமத் கருணரத்னே (கேப்டன்), சுரங்கா லக்மல், இசுரு உடனா, லசித் மலிங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), குசால் பெரேரா (விக்கெட் கீப்பர்), நுவன் பிரதீப், சுரங்கா லக்மல், ஜீவன் மெண்டிஸ், திசாரா பெரேரா, லாகிரு திரிமன்னே, ஜெப்ரி வாண்டர்சே, மிலிண்டா வர்தனா, அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா.

Tags : Bangladesh ,Sri Lanka , Bangladesh , Sri Lanka today
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...