வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்ரிக்கா மோதல் மழையால் ஆட்டம் ரத்து

சவுத்தாம்ப்டன்: உலக கோப்பையில் தென் ஆப்ரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே நேற்று நடந்த லீக் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. ரோஸ்பவுல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்க தொடக்க வீரர்களாக டி காக், அம்லா களமிறங்கினர். அம்லா 6 ரன் எடுத்து காட்ரெல் வேகத்தில் கிறிஸ் கேல் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மார்க்ராமும் 5 ரன் மட்டுமே எடுத்த நிலையில் காட்ரெல் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

வெஸ்ட் இண்டீஸ் 7.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 29 ரன் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. டி காக் (17 ரன்), கேப்டன் டு பிளெஸ்ஸி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னரும் மழை விடாது பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து இரு அணிகளும் தலா 1 புள்ளி பெற்றன. 


Tags : West Indies ,clash ,South Africa , West Indies - South Africa , rain
× RELATED வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் அணியின்...