பங்குச்சந்தை உயர்வு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

மும்பை: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 19 காசு சரிந்து ரூ.69.65 ஆனது. பங்குச்சந்தைகள் நேற்று சற்று ஏற்றமுடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 168.62 புள்ளிகள் உயர்ந்து 39784.52 ஆனது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 52.05 புள்ளிகள் உயர்ந்து 11,922.70 ஆக உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை வர்த்தக இடையில் 350 புள்ளிகள் உயர்ந்தாலும், மாலையில் சற்று சரிந்தது. சீனா அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் தணியும் என்ற எதிர்பார்ப்பால் பங்குச்சந்தைகள் சற்று ஏற்றம் பெற்றதாக சந்தை நிபுணர்கள் கூறினர். கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பேரல் 63.23 டாலராக குறைந்தது. இதை தொடர்ந்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 19 காசு சரிந்து ரூ.69.65 ஆக இருந்தது.

Tags : Stock market, rise, rupee value, fall
× RELATED வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்