×

ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணியில் களேபரம் டம்மி துப்பாக்கியுடன் வந்த இந்திய வம்சாவளி நபர் கைது: அமெரிக்காவில் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள துபான்ட் சர்க்கிள் பகுதியில் ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி கடந்த சனிக்கிழமை நடந்தது. இப்பேரணியில் நூற்றுக்கணக்கானோர் தங்களின் ஜோடிகளுடன் ஊர்வலமாக சாலையில் சென்றனர். அப்போது, கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக வதந்தி பரவியது. இதனால் பீதி அடைந்த பலரும் தலைதெறிக்க ஓடினர். பேரணியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் காயமடைந்தனர். அப்பகுதியே போர்க்களமாக மாறியது.

உடனடியாக போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். துப்பாக்கி சத்தம் கேட்டதாக பலர் கூறியது வெறும் புரளி என தெரியவந்தது. அப்போது, பையில் கைத்துப்பாக்கி வைத்திருந்த நபரை போலீசார் பிடித்தனர். அப்தாப்ஜித் சிங் (38) என்ற அந்த நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். இவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், தன்னுடன் நெருக்கமான பழகி வந்த ஒருநபர் பேரணியில் பங்கேற்றதாகவும், அவரை மிரட்டவே டம்மி துப்பாக்கி கொண்டு வந்ததாகவும் கூறினார்.

அப்தாப்ஜித் வைத்திருந்தது சிறிய ரக பால்ரஸ் குண்டுகளை போடும் ஏர்கன் போன்ற துப்பாக்கியாகும். இது பார்ப்பதற்கு நிஜமானதைப் போலவே இருக்கும். இந்த துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகவும், தவறாக பயன்படுத்தியதாகவும் அப்தாப்ஜித் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.  ஏற்கனவே அமெரிக்காவில் பொது இடத்தில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Indian ,nationals , Homosexuals rally, kalebaram dummy gun, Indian origin, person arrested
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்