×

அமித்ஷாவுடன் பன்வாரிலால் உட்பட 5 மாநில ஆளுனர்கள் சந்திப்பு

புதுடெல்லி: தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் உள்பட 5 மாநில ஆளுனர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்து பேசினர். அப்போது, அந்தந்த மாநில பிரச்னைகள் தொடர்பாக அவர்கள் ஆலோசித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பின்னர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இம்முறை பாஜ தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 1ம் தேதி அவர் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், தெலங்கானா ஆளுனர் நரசிம்மன், மேற்கு வங்க ஆளுனர் கேசரி நாத் திரிபாதி, அருணாச்சல் ஆளுனர் மிஸ்ரா, ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் மாநில ஆளுனராக உள்ள திரவ்பதி முர்மு ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்தனர். இது, அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் நடந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்பின் போது அந்தந்த மாநிலப் பிரச்னைகள் தொடர்பாக ஆளுனர்கள் தனித்தனியாக அமித்ஷாவுடன் கலந்து ஆலோசித்தனர் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : state governors ,Banwari ,Amit Shah , Amit Shah, Panwarilal, 5 State Governors, Meeting
× RELATED பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க...