×

கட்டாய கல்வி உரிமைக்கான நிதி குறைப்பு: டிடிவி.தினகரன் கண்டனம்

சென்னை: கட்டாய கல்வி உரிமைக்கான நிதியை தமிழக அரசு திடீரென குறைத்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் வசதி வாய்ப்பற்ற மாணவ, மாணவியருக்கு 25 சதவீத இடங்கள் இலவசமாக ஒதுக்கி தரப்படுகின்றன. தமிழ்நாட்டில்  இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கான கட்டணத்தை அரசின் பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்குச் செலுத்தி வருகிறது.

தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கான நிதியை அரசு திடீரென பாதிக்கு மேல் குறைத்து அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட தனியார் பள்ளிகள் பெற்றோர்களை நெருக்கடிக்கு ஆளாக்க தொடங்கியிருக்கின்றன. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் இந்த முடிவினை மக்கள் விரோத பழனிசாமி அரசு  உடனடியாக கைவிட்டு, இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். வசதியற்ற மாணவர்கள் கட்டணம் எதையும் செலுத்தாமல் தனியார் பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும்.  இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : Compulsory Education Rights, Finance, Dt.Dinakaran
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...