×

சூளகிரி அருகே விபத்துக்குள்ளான பஸ்சில் இருந்து இறங்கியபோது பரிதாபம் பயணிகள் கூட்டத்துக்குள் லாரி புகுந்து 3 பேர் பலி

சூளகிரி: சூளகிரி அருகே நேற்று அதிகாலை சாலை விபத்தில் சிக்கிய பஸ்சில் இருந்து உயிர்தப்பிய பயணிகள் மாற்று பஸ்சுக்காக காத்திருந்தபோது, கூட்டத்திற்குள் லாரி புகுந்து 2 குழந்தைகளுடன் தாய் பரிதாபமாக பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ் சென்று கொண் டிருந்தது. பஸ்சை திருவண்ணாமலையைச் சேர்ந்த சங்கர் ஓட்டினார். கண்டக்டராக திருவண்ணாமலையைச் சேர்ந்த மனோகரன் இருந்தார். சுமார் 50 பயணிகள் இருந்தனர்.  

நேற்று அதிகாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சுண்டேகிரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்தபோது, திடீரென சாலையை கடந்த டூவீலர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பியபோது சென்டர் மீடியனில் மோதியது. இதில், பஸ்சின் டயர்கள் கழன்றது.  இதையடுத்து, பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி சாலையோரமாக சென்று நின்றனர். அவர்களை மாற்று பஸ்சில் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் அதே வழியில் மற்றொரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. விபத்து நடந்திருப்பதை பார்த்து அந்த பஸ்சின் டிரைவர் வண்டியை மெதுவாக ஓட்டி வந்து நிறுத்த முயன்றார்.

அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று, அந்த பஸ் மீது மோதியது. இதில் அந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்சில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அதே நேரம் பயணிகள் கூட்டத்தில் புகுந்த லாரி, அங்கிருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் லாரி மோதி, திருவண்ணாமலையை சேர்ந்த கமால்பாஷாவின் மனைவி சைதானி(29). குழந்தைகள் முகமது சுகைதீன்(14), பவுனிஷா(12) ஆகியோர் பலியாகினர். மற்றொரு மகன் நிசார் காலில் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : lorry passenger crowd ,accident ,Sulagiri , Sulagiri, an accident bus, got off and was awoken
× RELATED தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா?.....