×

மாலியில் இனக்கலவரம் ஒரே நாளில் 100 பேர் கொலை

பாமாகோ: மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது மாலி குடியரசு. இங்கு தோகன் என்ற வேட்டையாடும் இனத்தவர்களுக்கும், அல்கொய்தா அமைப்பினருடன் தொடர்புடைய புலானி என்ற பிரிவினருக்கும் அடிக்கடி மோதல் நடந்து வந்தது. பழிக்குப்பழி நடவடிக்கையாக இவர்கள் நடத்தும் தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்நிலையில், மத்திய மாலி பகுதியில் உள்ள தோகான் கிராமத்துக்கு நேற்று முன்தினம் இரவு புலானி அமைப்பினர் துப்பாக்கியுடன் சென்று தாக்குதல் நடத்தினர். அந்த கிராமத்தில் மொத்தம் 300 பேர் இருந்தனர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய புலானிக்கள், அவர்களது வீடுகளிலும் கொள்ளையடித்தனர். அதன்பின் சுட்டுக் கொன்றவர்களின் உடல்களை தீயிட்டு கொளுத்தினர். இப்பகுதியில் இதுவரை 95 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.


Tags : riots ,Mali , Mali, ethnic origin, killing 100 people
× RELATED மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு...