×

அதிமுகவுக்கு இனி வெற்றி கிடைக்காது: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை:  ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு அதிமுகவின் பலம் படிப்படியாக குறைந்து தற்போது பலவீனம் அடைந்த நிலையில் உள்ளது. அதனால், அதிமுகவுக்கும் இனிமேல் வெற்றி வாய்ப்பு இல்லை என்று திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கூறினார். சட்டமன்ற தேர்தலிலும் பாஜ படுதோல்வியடையும் என திருநாவுக்கரசர் கூறினார். சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர் நேற்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவில் ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா? அல்லது ஐந்து பேர் கொண்ட கமிட்டி தலைமையா  என்பது பற்றி அந்த கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் நான் எதுவும் பதில் சொல்ல விரும்பவில்லை.தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி அதிமுகவின் இரட்டைத் தலைமை உட்கட்சி பூசலால் கிடைக்கவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு  அதிமுகவின் பலம் படிப்படியாக குறைந்து தற்போது பலவீனம் அடைந்த நிலையில் உள்ளது. காங்கிரஸின் சிறந்த தலைவர் ராகுல்காந்தி மட்டுமே அவர் தலைமையில் கட்சி மேலும் பல வெற்றிகளை குவிக்க இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்று தமிழிசை தொடர்ந்து கூறிவந்தார். ஆனால் படுதோல்வி அடைந்துவிட்டது. அதுபோல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெருவோம் என கூறுகிறார்.எனவே, சட்டமன்ற தேர்தலிலும் பாஜ கூட்டணி படுதோல்வி அடையும். அதேபோல் அதிமுகவுக்கும் இனிமேல் வெற்றி வாய்ப்பு இல்லை. சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொருப்பேற்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,interview ,Thirunavukkar , AIADMK, Thirunavukkarar, interview
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...