×

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி சென்னையில் பொதுமக்கள் பார்வைக்கு வாக்குச்சாவடி பட்டியல் வைக்கப்பட்டது

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 200 வார்டுகளுக்கான, வார்டு வாரியான வாக்குச் சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், ஆண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5,564 வாக்குச் சாவடிகளும் என மொத்தமாக 5,720 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையாளர் அலுவலகம், மண்டல அலுவலகங்களிலும், அனைத்து வார்டு அலுவலகங்களிலும், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனை அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அரசியல்கட்சியினர் பார்வையிட்டனர். அவர்கள் பட்டியல் தொடர்பாக ஆட்சேபனைகள், கருத்துக்கள் ஏதேனும் இருந்தால், அதை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தெரிவிக்கலாம். அதிகாரிகள் அதை பரிசீலித்து, தேவைப்பட்டால் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு இறுதி பட்டியல் வெளியிடுவார்கள்.

Tags : election ,Chennai ,viewing , Local election, Chennai, polling list
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...