உலகக்கோப்பை கிரிக்கெட்: மேற்கு இந்திய தீவுகள்-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான போட்டி கைவிடப்பட்டது

சவுதாம்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய மேற்கு இந்திய தீவுகள்-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 7.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுகிட்டதால்,  இரு அணிக்கு 1 புள்ளி அளிக்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : World Cup Cricket ,West Indies ,South Africa ,teams , World Cup Cricket, West Indies, South Africa
× RELATED இந்தியா - தென்னாப்ரிக்கா 3வது டெஸ்ட்...