×

லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமன ஆணையை ரத்து செய்யக் கோரி வழக்கு : தேர்வு செய்யப்பட்ட ஐவரையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஆணை

மதுரை : லோக் ஆயுக்தா குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தேர்வு செய்யப்பட்ட ஐவரையும் எதிர் மனுதாரராக சேர்த்து மனுத்தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்தியா முழுவதும் லஞ்சம் லாபங்களை ஒழிப்பதற்காக லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் ஆயுக்தா குழுக்கள் நியமிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் லோக் ஆயுக்தா குழுவை நியமிப்பதற்கான ஒரு கூட்டம் நடைபெற்றது.

 பொதுவாக ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் மாநிலத்தின் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் ஆகியோர் கூட்டத்தில் ஒன்றுகூடி குழுவை நியமனம் செய்வார்கள். ஆனால் தமிழகத்தில் இது போன்று நடைபெறவில்லை. எதிர்க்கட்சி தலைவர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தமிழக முதல்வரும், சபாநாயகரும் மட்டும் சேர்ந்து லோக் ஆயுக்தா குழுவை நியமித்துள்ளனர். ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் என ஐவர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ஆளுகட்சியினரே ஐவர் கொண்ட  குழுவை நியமித்துள்ளது  சட்ட விதிகள் முறைகளின்படி மிகவும் எதிரானது. இந்த குழுவில் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உறுப்பினர்களுக்கு தடையும் விதிக்கப்பட்டது. எனவே தமிழக அரசால் நியமிக்கப்பட்ட லோக் ஆயுக்தா குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் வேண்டும்,என்று தெரிவிக்கப்பட்டது

வழக்கு விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இந்த மனு நீதிபதி சத்யநாராயணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், லோக் ஆயுக்தா குழு நியமிக்கப்பட்டு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ள 5 பேரின் கருத்துக்களையும் கேட்பது அவசியம் என்பதால், 5 பேரையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூன் 21ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Lokayukta ,cancellation , Lok Ayuktha, Group, Members, Appointment, Pleading
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...