×

நாடாளுமன்ற தேர்தலைபோல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற சபதம் ஏற்போம் : அன்பில் தர்மலிங்கம் சிலையை திறந்து வைத்து ஸ்டாலின் பேச்சு

திருச்சி : மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் சிலையை அவரது சொந்த ஊரான அன்பிலில் திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது 100வது பிறந்த நாளை முன்னிட்டு 500 கிலோ எடையுடன் 7 அடி உயர வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டது. அதனை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அன்பில் தர்மலிங்கம் நூற்றாண்டு மலர் புத்தகத்தை ஸ்டாலின் வெளியிட அதனை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக் கொண்டார். ஐ. பெரியசாமி, சுப தங்கவேலன், திருச்சி எம்பி சிவா, நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை போலவே அன்பில் தர்மலிங்கத்தின் வழியில் செயல்பட்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்றார்.

மேலும் ஸ்டாலின் கூறியதாவது, திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது திருச்சியில் திமுக வளர்ச்சிக்காக பாடுபட்டவர் அன்பில் தர்மலிங்கம். தலைவர் கருணாநிதி காலத்தில் அவருக்கும், கட்சிக்கும் உறுதுணையாக இருந்து பாடுபட்டவர். அவரது அயராத உழைப்பு இன்றைக்கும் மறக்க முடியாத ஒன்று.  திருச்சி திமுக என்றால் அது அன்பில் தர்மலிங்கத்தையே சாரும். அவர் விட்டுச்சென்ற பணிகளை ஆக்கபூர்வமாக செயல்படுத்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த நேரத்தில் சபதம் ஏற்க வேண்டும். நடந்து முடிந்து நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும்  வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததற்கு உங்களுக்கு  நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் திமுகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதற்கு திமுகவினர்  இப்போதே பாடுபட வேண்டும்.அதற்கு அனைவரும் இந்த தருணத்தில் சபதம் ஏற்போம்.இவ்வாறு அவர் பேசினார்.


Tags : election ,assembly election ,Stalin ,Dharmalingam ,opening , Love is Dharmalingam, DMK, leader, Stalin, Karunanidhi
× RELATED விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு...