×

மேடை நாடக உலகிற்கு இன்று கருப்பு தினம்!!: நகைச்சுவை நடிகரும், வசனகர்த்தாவான கிரேஸி மோகன் இயற்கை எய்தினார்

சென்னை : பிரபல நகைச்சுவை நடிகரும், நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன்(66) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை காவேரி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த கிரேஸி மோகன், சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு இயற்கை எய்தினார். கிரேஸி மோகன் மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான பல படங்களுக்கு வசனம் எழுதியவர் கிரேஸி மோகன்.

கிரேஸி மோகன் பொறியாளர் டூ  கலைமாமணி

1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்த கிரேஸி மோகன், 1983ல் திரையுலகிற்கு வந்தார். முதலில் பொறியாளராக வாழ்க்கையை துவங்கிய கிரேஸி மோகன், 1979-ல் கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவை தொடங்கி பல காமெடி நாடகங்களை அரங்கேற்றினார். டைமிங் காமெடி வசனங்களை எழுதுவதில் கைதேர்ந்தவர், கிரேஸி மோகன். பொய்க்கால் குதிரை படத்தில் முதன் முதலாக வசன கர்த்தாவாக கிரேஸி மோகன் அறிமுகமானார். நாடகத்துறைக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதை 2004ம் ஆண்டு கிரேஸி மோகன் பெற்றுள்ளார்.

கமல்ஹாசனும் கிரேஸி மோகனும்

கமல்ஹாசன் நடித்துள்ள பல படங்களுக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதியுள்ளார். வசூல்ராஜா எம்பிபிஎஸ், பஞ்சதந்திரம், தெனாலி சதிலீலாவதி, அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, காதலா காதலா ஆகிய படங்களுக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதி உள்ளார்.

alignment=


நகைச்சவை நாடகங்களால் புகழ்பெற்றவர்

1979-ல் கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவை கிரேஸி மோகன் நடத்தி வந்தார். 30க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, இயக்கி,மேடை ஏற்றியுள்ளார். 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ள கிரேஸி மோகன், பல படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை மோகன் எழுதி உள்ளார். ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் கிரேஸி மோகன் நடித்துத்துள்ளார். ஆச்சி இன்டர்நெஷனல், சிரி சிரி கிரேஸி, மெட்டி ஒலி  தொலைக்காட்சி தொடர்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். கிரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா நாடகம் 2 ஆண்டுகளில் 500 முறை மேடை ஏற்றப்பட்டுள்ளது.

திரை உலகினர் இரங்கல்

*மக்களுக்கு நல்ல தகவல்கள் சென்றடையும் வகையில் நகைச்சுவைகளை எழுதியவர் கிரேஸி மோகன்: நகைச்சுவை நடிகர் சார்லி

*கிரேஸி மோகனுக்கு நிகர் அவரே தான் அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது - நடிகர் ராதாரவி

*மேடை நாடக உலகிற்கு இன்றைய நாள் கருப்பு தினம் - திரைப்பட நடிகர் மோகன் ராம்

*மக்கள் முகம் சுளிக்காத வகையில் வசனங்களை எழுதியவர் கிரேஸி மோகன் : நடிகர் எஸ்.வி.சேகர்

*கிரேஸி மோகனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது; என்னால் பேச முடியவில்லை : இயக்குனர் வசந்த்

*கிரேஸி மோகனின் புகழ் திரையுலகில் என்றும் மறையாது - நடிகர் தியாகு

Tags : Black Day ,Crazy Mohan ,Comedy actress , Crazy Mohan, engineer, artist, screen world, mourning, joke
× RELATED கலிபோர்னியா மாகாண சட்டமன்றத்தில்...