×

அரிமளம் அருகே மஞ்சுவிரட்டு: 250 காளைகள் பங்கேற்பு

திருமயம்: அரிமளம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள புதுநிலைப்பட்டி கண்ணுடைய, குருந்துடைய அய்யனார்கோயில் புரவி எடுப்பு திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. இதனிடையே திருவிழாவை முன்னிட்டு நேற்று கிராமமக்கள் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் அரிமளம், திருமயம், கே.புதுப்பட்டிபள்ளத்தூர், காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை, திருப்பத்தூர், சிவகங்கை, மேலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மஞ்சுவிரட்டுக்கென பிரத்யேகமாக அமைக்கபட்டிருந்த திடலில் முதலில் உள்ளூர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்திருந்த காளைகளை உரிமையாளர்கள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். அவிழ்க்கப்பட்ட காளைகளை அப்பகுதி இளைஞர்கள் பிடிக்க துரத்தி ஓடினர். இதில் ஒரு சில காளைகளை இளைஞர்கள் மடக்கி பிடித்த நிலையில் பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் தப்பி ஓடின. நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனைக்காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்துஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.

Tags : Manjuvittu ,Arimala , Tirumayam, Manju ridding, Bulls
× RELATED முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும்...