×

கண்டமனூரில் தொடரும் சாரல் மழை... பொதுமக்கள் சொந்த செலவில் தூர்வாரிய கண்மாய் நிரம்புகிறது

வருசநாடு: கண்டமனூர் கிராமத்தில் சில நாட்களாக பெய்து வரும் மழையால் பரமசிவன் கோயில் கண்மாய் நிரம்ப துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கண்டமனூர் கிராமத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது இதனால் அப்பகுதியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டு கண்டமனூர் பரமசிவன் கோயில் கண்மாயில் நீர் தேங்க தொடங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் அதிகளவில் சாரல் மழை பெய்யும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதுகுறித்து கண்டமனூரை சேர்ந்த அங்குசாமி கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள பரமசிவன் கோயில் கண்மாயை கிராம மக்கள் ஒன்று கூடி சொந்த செலவில் சுத்தம் செய்து ஆழப்படுத்தி உள்ளோம். மழைநீர் தேக்கி இப்பகுதிகளில் குடிநீர் பஞ்சத்தை போக்குவதே திட்டத்தின் நோக்கம். இது போன்ற மற்ற கண்மாய்களையும் பொதுமக்கள் ஒன்று கூடி கண்மாய்களை தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தினால் கடமலை- மயிலை ஒன்றியத்தில் எப்போதும் குடிநீர் பஞ்சம் வராமல் பார்த்துக்கொள்ளலாம். இது போன்ற பணிகளில் ஈடுபடும் பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் தேனி மாவட்ட நிர்வாகம் ஊக்கப்படுத்தினால் பணி சிறப்பு அடையும் என்று தெரிவித்தார்.

Tags : continent , Varshanad, kantamanur, dank
× RELATED அஜித் குமார் படத்தில் ரெஜினா