×

சூளகிரி அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து : 3 பேர் பலி, 10 பேர் படுகாயம்

ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சாலையை கடந்து சென்ற 3 பேர் உயிரிழந்துவிட்டனர். ஓசூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சூளகிரி அடுத்த சுண்டகிரியை கடந்த போது, பழுதாகி விட்டதால் ஓரம் கட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகளை மாற்றுப் பேருந்தில் அனுப்புவதற்காக இறக்கிவிடப்பட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றோரு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்து மீது மோதாமல் இருக்க இடதுபுறம் திருப்பிய போது, பின்னால் வந்த லாரி மோதிவிட்டது.

அப்போது சாலையை கடந்து சென்ற 3 பயணிகள் நிகழ்விடத்திலேயே இறந்துவிட்டனர். இந்த விபத்தில் காயம் அடைந்த 10 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விபத்துக்குள்ளான பேருந்து மற்றும் லாரியை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

 இந்த விபத்தில் மற்ற பயணிகள் சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விபத்தில் இறந்தவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.திருவண்ணாமலையை சேர்ந்தவர் கமால்பாஷா (32). இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இவரது மனைவி சைதானி (29). இவர்களுக்கு முகமது சுகைதீன் (14), பௌனிஷா (12), நிசார் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். கமால்பாஷா குடும்பத்துடன் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது இந்த கோர விபத்தில் சிக்கி அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் இறந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : collision ,Larry ,Sulagiri , Krishnagiri, State Bus, Larry, Suluggery, Accident
× RELATED ரயில் மோதி அரசு பஸ் டிரைவர் பலி