×

பிரானா மீன்களுக்கு இரையாக்கி ராணுவ ஜெனரல் கொடூர கொலை? வடகொரிய அதிபர் கொடூரம்

லண்டன்: ராணுவ புரட்சி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சிக்கிய ராணுவ ஜெனரலை பிரானா மீன்களுக்கு இரையாக்கி, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கொடூரமாக கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வாதிகார ஆட்சி புரியும் வடகொரிய நாட்டு அதிபர் கிம் ஜோங் உன், மிகவும் கோபக்காரர். தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக அவர்களுக்கு மரண தண்டனை தருபவர். அதிலும் அந்த தண்டனை மிகக் கொடூரமாகவும் இருக்கும். அந்த வகையில், தற்போது அவர் கொடூர தண்டனை ஒன்றை நிகழ்த்தியிருப்பதாக இங்கிலாந்து உளவுத்தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராணுவ புரட்சி நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில், வடகொரிய ராணுவ ஜெனரல் ஒருவருக்கு கிம் ஜோங் உன் மரண தண்டனை விதித்துள்ளார். அந்த ஜெனரலின் பெயர் வெளியிடப்படவில்லை. முதலில் கை, உடல் பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட அவரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி உள்ளார் கிம். பியாங்க்யாங்க்கில் உள்ள தனது வீட்டில் கிம் வைத்திருக்கும் பிரமாண்டமான பிரானா மீன் தொட்டியில் தளபதியை தூக்கி போட்டுள்ளார். அதிலிருந்த நூற்றுக்கணக்கான பிரானா மீன்கள், அவரது உடலை கடித்து குதறி சாப்பிட்டுள்ளன.

பிரானா மீன்கள் மிக மூர்க்கமானவை. இரும்பு போன்ற பற்களை கொண்ட அவை சக மீன்கள், பறவைகள் மட்டுமின்றி மனித தசைகளையும் விரும்பி சாப்பிடக்கூடியவை. இரும்பு தகட்டையே கடித்து தூள்தூளாக்கும் வலுவான பற்களை கொண்ட பிரானாக்கள், மனித உடலை கடித்து குதற வெகுநேரம் ஆகாது. தந்தையிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை பெற்ற பிறகு கிம் ஜோங் உன், இதுவரை அரசில் உயர் பதவி வகிக்கும் 16 பேரை போட்டுத் தள்ளி உள்ளார்.

இதற்கு முன், பீரங்கிகளை தகர்க்க பயன்படுத்தும் துப்பாக்கி குண்டு மூலமும், தீயை கக்கும் துப்பாக்கிகள் மூலமும் சுட்டுக் கொடூர சம்பவங்களை நிகழ்த்தி உள்ளார். அமெரிக்கா உடனான அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அந்நாட்டுக்கான சிறப்பு தூதர் கிம் சோல் வடகொரிய விமான நிலையத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ராணுவ தலைமை தளபதி, மத்திய வங்கி சிஇஓ, கியூபா, மலேசியா நாட்டு தூதர்கள் உள்ளிட்டோருக்கும் கிம் மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார்.

ஜேம்ஸ்பாண்ட் பட பாணி:
கடந்த 1965ம் ஆண்டில் வெளியான ‘யு ஒன்லி லிவ் டுவைஸ்’ என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வில்லன் தனது உதவியாளரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்யும் காட்சிகள் உள்ளன. அந்த தண்டனை பிடித்துப் போனதால், கிம் ஜோங் உன்னும் அதே போல தண்டனையை நிகழ்த்தியிருக்கலாம் என இங்கிலாந்து உளவுப்படையினர் கூறுகின்றனர்.

Tags : Prana ,army general ,Chauffeur ,North Korean , Prana fish, smuggling, army general, brutal murder North Korean Chancellor
× RELATED கிளாஸ்மேட்ஸ் விமர்சனம்