குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு கடந்த சில வருடங்களாக குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவித்து நிதியுதவி, பைப்லைன் அமைப்பு, உரங்கள் என வழங்கியது பயனுள்ளதாக இருந்தது. அதே போன்று இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தொகுப்புத் திட்டம் மூலம் உதவிகள் செய்தால் விவசாயிகள் பயன் பெறுவார்கள், விவசாயமும் சரிவர நடைபெறும். எனவே தமிழக அரசு இந்த ஆண்டாவது குறுவை சாகுபடி முழுமையாக நடைபெற விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கைகள் எடுத்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : implementation ,GK Vasan , Jumbo, package set, implementation, GK Vasan
× RELATED இலங்கை கடற்படையால் மீனவர்கள்...