×

ஒரே அணிக்கு எதிராக அதிவிரைவாக 2000!

ஒரு நாள் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக மிகக் குறைந்த இன்னிங்சில் 2000 ரன் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் ஷர்மா நிகழ்த்தியுள்ளார். லண்டனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் அவர் இந்த சாதனை மைல் கல்லை எட்டினார். ஆஸி.க்கு எதிராக 2000 ரன் கடக்க ரோகித் ஷர்மாவுக்கு 37 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டுள்ளது. முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 40 இன்னிங்சிலும், விராத் கோஹ்லி இலங்கை அணிக்கு எதிராக 44 இன்னிங்சிலும் 2000 ரன் எடுத்துள்ளனர். ரிச்சர்ட்ஸ் ஆஸி.க்கு எதிராக 44 இன்னிங்சிலும், டோனி இலங்கைக்கு எதிராக 45 இன்னிங்சிலும் இதை நிகழ்த்தி உள்ளனர்.

* ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 2000 ரன் எடுத்த 4வது வீரர் ரோகித். முன்னதாக சச்சின் (இந்தியா), டெஸ்மாண்ட் ஹெயின்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தனர்.

* ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ரோகித் - தவான் ஜோடி 22 இன்னிங்சில் 1273 ரன் சேர்த்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரீனிட்ஜ் - ஹெயின்ஸ் ஜோடி 29 இன்னிங்சில் 1152 ரன் சேர்த்து படைத்த சாதனையை இந்திய ஜோடி நேற்று தகர்த்தது.

* ஆஸி.க்கு எதிராக ரோகித் - தவான் ஜோடி 6வது முறையாக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் கண்டுள்ளது. கிரீனிட்ஜ் - ரிச்சர்ட்ஸ், லஷ்மண் - சச்சின், ரகானே - ரோகித் ஜோடிகள் தலா 4 முறை 100+ ரன் சேர்த்துள்ளன.

* ஒருநாள் போட்டிகளில் ரோகித் - தவான் ஜோடி 16வது முறையாக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் கண்டுள்ளது. தொடக்க ஜோடிகளுக்கான இந்த வரிசையில் சச்சின் - கங்குலி இணை (21) முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஹேடன் - கில்கிறிஸ்ட் ஜோடியுடன் (16) ரோகித் - தவான் ஜோடி 2வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.

Tags : team , The only team, against, the quickest, 2000!
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா