பைக் தீ வைத்து எரிப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (45). இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் காமராஜ் (38). இவர்கள் இருவருக்கும், வீட்டு வாசலில் தங்களுடைய கார், பைக் பார்க்கிங் செய்வது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி தனது பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். இரவு 12 மணிக்கு இவரது பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து சுப்பிரமணி ஓடிவந்து தீயை அணைக்க முயன்றார். ஆனால் அதற்குள் பைக் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனையடுத்து தன்னுடைய பைக்கை காமராஜ் தான் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக சுப்பிரமணி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  


× RELATED பிரபல ஓட்டலில் தீ