×

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று கூறுவது ஏமாற்று வேலை: சாலமன் பாப்பையா, தமிழறிஞர்

இந்தி திணிப்பு இருந்தால் தமிழத்தில் நமது மொழியை காப்பாற்றுவது கஷ்டம் தான். தமிழை படிக்க சொல்லி வட மாநிலங்களில் அவர்கள் தமிழை திணிப்பதில்லை. ஆனால், நம்மிடம் இந்தியை திணிக்கின்றனர். இது ெமாழி ஆதிக்க கொள்கை. இந்த போக்கை யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். நமது ஊருக்கு தமிழ் முக்கியம். சிறப்பான தமிழ் மொழி நமக்கு. இப்போது ஆங்கிலமும் நமக்கு இருக்கிறது. இந்தி கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு தடையில்லை. அதை திணிப்பதைதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த மொழியானாலும் அதை வற்புறுத்தி திணிப்பது தவறானதுதான். ஆங்கிலம் திணிக்கப்பட்டதால் இப்போது தமிழுக்கே சற்று நெருடல் இருந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தியையும் திணிக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படி. இந்தியை திணித்தால் தமிழ் மொழியை முதலில் முடித்து கட்ட வேண்டும் என நினைக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

பல்லாண்டுகாலமாக எதிர்த்து கொண்டிருக்கிற ஒரு விஷயத்தை திரும்பவும் அவர்கள் திணிக்கலாமா. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒரு சாதாரண தமிழ் ஆசிரியர் என்ற முறையில் ஒன்றை கூறுகிறேன். அவரவர்கள் தங்கள் தாய்மொழிக்கு சேவை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மொழி தானாக வளர்ந்து விடும். அனேகமாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு அனைவரும் சேவை செய்வார்கள் என்று நினைக்கிறேன். வெளிநாட்டில் வேலை இருப்பதால் பலர் ஆங்கில மொழி பயிற்றுக்கல்வியை படிக்க விரும்புகின்றனர். தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகம் இல்ைல. இங்கு வேலைவாய்ப்பை கூட்டினால் தமிழ் மொழி பயிற்றுக்கல்வியை படிக்க விரும்புவார்கள். பலரும் ஆங்கிலம் என்ற மாயையில் இருந்து மீண்டும் வெளியே வருவார்கள். இந்தி படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவது ஏற்க முடியாத ஒன்று. தமிழகத்தில் வேலை பார்க்க இப்போது பல வட மாநிலத்தவர்கள் வருகின்றனர். இதற்காக வடக்கே தமிழ் கட்டாயம் என்று கூறவில்லையே. அதிகளவில் வட மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இங்கு வந்து தானே தமிழ் மொழியை கற்கின்றனர். இந்தி படித்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்று கூறுவது ஏமாற்று வேலை. அவரவர்கள் அவர்களது ஊரில் வேலை பார்க்கட்டும். நாம் கருத்து பரிமாற்றத்திற்கு சொல்லலாமே தவிர,  இந்தி படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவது ஏமாற்றுவேலை.

Tags : Salomon Papaiya ,Tamilnadu , Hindi, work, salmon papaya
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு