×

ரூ1,200 கோடி வாடகை வசூலிக்காமல் தூங்கும் அறநிலையத்துறை அதிகாரிகள்: பக்தர்கள், நன்கொடையாளர்கள் குற்றச்சாட்டு

சென்னை: அறநிலையத்துறைக்கு வரவேண்டிய 1200 கோடி வாடகையை வசூலிக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் தூங்குவதாக பொதுமக்கள், பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளது. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சத்து 83 ஆயிரத்து 669 ஏக்கர் விளைநிலமும், 2 லட்சத்து 18 ஆயிரத்து 226 ஏக்கர் தரிசு நிலமும், 20 ஆயிரத்து 746 மானாவாரி நிலமும் உள்ளது. இந்த நிலங்கள் குறைந்த விலைக்கு இந்து அறநிலையத்துறையால் குத்தகைக்கு விடப்படுகிறது.

இதை தவிர்த்து 22,600 கட்டிடங்களும், 33,665 மனைகள் உள்ளது. இந்த கட்டிடங்கள் மற்றும் மனைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. சிலர் அதை உள்வாடகைக்கு விட்டு சம்பாதித்தாலும் அரசுக்கு முறையாக வாடகையை செலுத்துவதில்லை. அந்த வகையிலும் பல்வேறு வாடகை பாக்கி வகையிலும் அறநிலையத்துறைக்கு தற்போது வரை ரூ1,200 கோடி வரை வாடகை நிலுவையில் உள்ளது.  இதை வசூலிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக, பல ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்திருப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், கோயில் அலுவலர்கள் பாக்கி வைத்திருப்பவர்களிடம் சில லட்சங்களை வாங்கி கொண்டு அவர்களது வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்தாலும் அவர்களை கண்டு கொள்வதில்லை. இதனால், வாடகை பாக்கி தொகை இன்று வரை வசூல் செய்யப்படாமல் உள்ளது. இதனால், அறநிலையத்துறை சார்பில் கோயில் வளர்ச்சி பணிகளை முறையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அறநிலையத்துறை சார்பில் வாடகை பாக்கியை வசூலிக்க மண்டல அளவில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ெபற முடியும் என்று பக்தர்கள், நன்கொடையாளர்கள் அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் பணம் பெற்றுக்கொண்டு பாக்கி தொகை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுக்குமாறு அறிவுரை வழங்குகின்றனர். இதனால், பாக்கி தொகையை பெறுவதில் பல ஆண்டு காலமாக சிக்கல் நீடித்து வருகிறது. நிலங்கள், கட்டிடங்களில் பல ஆண்டுகளாக பாக்கி வைத்திருப்போர் மீது அறநிலையத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அப்போது தான் பாக்கி தொகையை வசூலிக்க முடியும்’ என்றனர்.

Tags : Staff Authorities Officers ,Donors ,Devotees , Rental, Endowment Department officials, visitors, donors accusation...
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்