×

சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டம் பிட்காயின் வைத்திருந்தால் 10 ஆண்டு சிறை

புதுடெல்லி: பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்கள் வைத்திருந்தால், பரிவர்த்தனை செய்தால் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிட்காயின் கிரிப்டோ கரன்சிகள் டிஜிட்டல் வடிவில் உள்ள நாணயங்கள். இவை கம்ப்யூட்டர்கள், இதற்கான ஏடிஎம்கள் மூலமாக பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. பிட்காயின் போன்று ஏராளமான கிரிப்டோ கரன்சிகள் சீனா, அமெரிக்கா, கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் உள்ளன. இந்தியாவில் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்வோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் சட்ட விரோதமாக பரிவர்த்தனை நடக்கிறது. இதை தடுக்க கடுமையான சட்டம்  கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக ‘கிரிப்டோ கரன்சிகள் தடை மற்றும் முறைப்படுத்துதல் மசோதா - 2019’ வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன. இதில், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் வைத்திருப்பது, விற்பது, வாங்குவது போன்றவை கடும் குற்றமாக கருதப்படும். இவற்றில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. ஜாமீனில் வெளிவர முடியாது. இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் ஆக்கப்பட்டால், பிட்காயின் வைத்திருப்பவர்கள் தங்களிடம் எவ்வளவு மதிப்பிலான கரன்சி உள்ளது என 90 நாட்களுக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றனர்.

Tags : jail ,government , Law, federal government, prison, prison
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!