×

சுற்றுலாவை மேம்படுத்த கொச்சி - மாலத்தீவு இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து

புதுடெல்லி: சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கேரளாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்தை தொட ங்க இந்தியாவும், மாலத்தீவும் சம்மதித்துள்ளன. பிரதமர் மோடி 2வது முறையாக பதவியேற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று முன்தினம் மாலத்தீவு சென்றார். அந்நாட்டு அதிபர் இப்ராகிம் சோலியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இரு நாடுகள் இடையே கப்பல் போக்குவரத்து, சுகாதாரம், பாதுகாப்பு உட்பட 6 ஒப்பந்தங்கள் கைெழுத்தானது. இதன் அடிப்படையில், கொச்சி-மாலே இடையே உள்ள 700 கி.மீ தூரத்துக்கு பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை விரைவாக தொடங்க, இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்த கப்பல் மாலத்தீவின் தென் பகுதியில் உள்ள குல்குதுபுசி அடோல் வழியாக மாலே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குண்டுவெடித்த சர்ச்சில் பார்வை

தனது மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்ட மோடி, நேற்று அங்கிருந்து இலங்கை சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் மகிந்தா ராஜபக்சே ஆகியோரை சந்தித்து, அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்குப்பின், அங்கு செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கலான நேரத்திலும் இலங்கைக்கு, இந்தியா ஆதரவாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் பயணம் அமைந்தது. இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பினார்.

Tags : Cochin ,Maldives , Travel, Kochi, Maldives, Shipping
× RELATED மேலும் பல இந்திய வீரர்கள்...