×

கிருஷ்ணகிரி அருகே 2 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள மலையில் 2 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி அருகே, பொம்மலப்பன் மலையின் தெற்கு பகுதியில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மனித வரலாற்றில் எழுத்துக்கள் கண்டறிவற்கு முன்பு, தன்னுடைய எண்ணங்களையும், வாழ்க்கை முறையையும் தெரிவிக்க மனிதன் கையாண்ட வழிகளில் ஒன்று தான் பாறை ஓவியங்கள். இங்கு நடந்த ஆய்வின்போது, 2 பாறைகளில் கவி போன்ற அமைப்பில், இரண்டு பாறை ஓவியத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. முதல் தொகுதியில் 40க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காணப்படுகிறது. ஒரு ஓவியம் காவடி தூக்கியவாறு அமைந்துள்ளது. இதில் ஒரு ஆண் வில் கொண்டு வேட்டை ஆடுவது போன்று குறிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் பெண்களும் வேட்டைக்கு சென்றதற்கான அடையாளமாக வில் கொண்டு வேட்டையாடுவது போல் பெண் உருவம் வரையப்பட்டுள்ளது.இரண்டாவது தொகுதியில், ஒரு வீரன் வில் வைத்து வேட்டையாடுவது போல் ஓர் ஓவியம் உள்ளது. இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Tags : Krishnagiri , Krishnagiri, rock paintings
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்