×

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பதா?: காவல் துறைக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஜூன் 5ம் தேதி முதல் ஜுன் 10ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பிரச்சாரத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதை கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தடையை மீறி பிரச்சாரம் செய்த கட்சியின் பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காவல் துறையின் இத்தகைய அராஜக நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதே போல் தான் எட்டுவழிச்சாலை அமைந்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து நடைபயணம் மூலம் பிரச்சாரம் செய்ய முயன்றபோது, பிரச்சார பயணத்தை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதிமுக அரசு தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு, மத்திய அரசு கொண்டு வரும் இத்திட்டத்தின் பாதிப்புகளை மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கு உரிய அனுமதியை வழங்குவதோடு, இத்திட்டத்தை தமிழகத்தில் தடைசெய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Tags : K.Balakrishnan , Hydro Carbon, Police Department, K.Balakrishnan
× RELATED 100 கூட தேறாது…தோல்வி பயத்தால் மோடிக்கு தூக்கம் போச்சு…கே.பாலகிருஷ்ணன்