உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக அவதூறு: திருமணம் செய்து கொள்ள காத்திருக்கிறேன்...இளம்பெண் பரபரப்பு பேட்டி

லக்னோ: தலைநகர் டெல்லி, லட்சுமி நகர் அடுத்த மேற்கு வினோத் நகரை சேர்ந்த பிரசாந்த் கனோஜியா என்பவர், ஆன்லைன் செய்தி நிறுவனத்தின் முன்னாள் பத்திரிகையாளர்; தற்போது பகுதிநேர பத்திரிகையாளராக உள்ளார். இவர், நேற்று மதியம் வீட்டில் இருந்த போது, உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அடுத்த ஹஸ்ரத்கன்ஜ் போலீசார் மப்டி உடையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது வீட்டில், பிரசாந்த் கனோஜியாவின் மனைவி ஷாஹிஷா அரோராவும் இருந்தார். எவ்வித விளக்கமும் அளிக்காமல் பிரசாந்த் கனோஜியாவை போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு லக்னோவிற்கு அழைத்து வந்தனர். தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 மற்றும் அதனுடன் தொடர்புடைய கம்ப்யூட்டர் தொடர்புடைய குற்றத்திற்கான பிரிவு 500, அவதூறு பரப்புதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதுகுறித்து, லக்னோ சீனியர் போலீஸ் எஸ்பி கலாநிதி நையிதானி கூறுகையில், ‘‘இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் மற்றும் சீரியஸானது. பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் டுவிட்டர், ேபஸ்புக் வீடிேயா மற்றும் கருத்து பதிவுகள் தொடர்பாக அவரிடம் ெதாடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றார்.

முன்னதாக, சமூக வலைதளங்களில் பிரசாந்த் கனோஜியா வெளியிட்ட வீடியோவில், ‘உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்வதற்கு அவரிடம் விருப்பம் தெரிவித்தேன். அதுதொடர்பாக பலமுறை அவரிடம் பேசினேன்’ என்று பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த தகவலை அந்த பெண், முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தின் வெளியே கூறுவதுபோல் அந்த வீடியோ இருந்தது.  கடந்த ஒருசில நாட்களாகவே இந்த வீடியோ அனைவரது மத்தியிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்வரை அவமதிக்கும் வகையில் வீடியோவில் உள்ளதாக கூறி, ஹஸ்ரத்கன்ஜ் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பிரசாந்த் கனோஜியா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரசாந்த் கனோஜியா வீடியோ மற்றும் கருத்து பதிவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, முதல்வருக்கு எதிராகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘காதலை மறைக்க முடியாது; யோகிஜி நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்’ என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதனால் பிரசாந்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு கைது செய்து விசாரிக்கிறோம்.  முதல்வர் அலுவலகம் பகுதியில் மீடியாக்களிடம் பேட்டியளித்த பெண், கான்பூர் பகுதியைச் சேர்ந்த ஹேமா சக்சேனா. அவர், முதல்வருக்கு எழுதிய காதல் கடிதங்கள் குறித்து மீடியாக்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வரிடம் தான் அடிக்கடி பேசிய வீடியோ ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனால், அந்த இளம்பெண்ணிடமும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, பிரசாந்த் கனோஜியா மனைவி ஷாஹிஷா அரோரா கூறுகையில், ‘பிற்பகல் 12.30 மணியிருக்கும். நான் என் கணவருடன் வீட்டில் இருக்கும் போது வந்த லக்னோ போலீசார், முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கூறி, என் கணவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும் விபரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை’ என்றார்.

Tags : interview ,UGC , UP Chief Minister Yogi Aditya Nath, Violence, Marriage, Teenager
× RELATED அதிமுக பொதுக்குழு எப்போது? : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி