×

உலகக்கோப்பை கிரிக்கெட்; தவான் சதம் விளாசல்: ஆஸ்திரேலிய அணிக்கு 353 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

லண்டன்: லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 353 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ஷிகர் தவான் 109 பந்துகளுக்கு 117 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 77 பந்துகளுக்கு 82 ரன்களும், ரோகித் சர்மா 70 பந்துகளுக்கு 57 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளுக்கு 48 ரன்களும், டோனி 14 பந்துகளுக்கு 27 ரன்களும் எடுத்தனர். இதனை தொடர்ந்து 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.


Tags : World Cup Cricket ,Dhawan ,win ,India ,Australia , World Cup Cricket, Dhawan, Australian team, win, India
× RELATED வீணர்தம் சதி முறித்து வெற்றிகளை...