×

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க டெல்லி வாருங்கள்: தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

கொழும்பு: இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு டெல்லி வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டுப்  பயணமாக நரேந்திரமோடி மாலத்தீவு, இலங்கை சென்றார். அண்டைநாடுளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைப்படி, கடந்த முறை பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, தற்போது முதல் பயணமாக நேற்று மாலத்தீவு சென்றார்.  தொடர்ந்து, வெளிநாட்டினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய ‘நிஷான் இஸ்ஸுதீன்’ விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி மாலத்தீவு அதிபர் இப்ராகிம்  கவுரவித்தார். தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்டு தந்த பேட்டை மாலத்தீவு  அதிபர் இப்ராகிமிற்கு பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.

தொடர்ந்து 2-வது நாளில் இன்று பிரதமர் மோடி இலங்கை சென்றார். இலங்கை அதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொட்டும் மழையில், இலங்கை சார்பில், அளிக்கப்பட்ட அரசு மரியாதையை  பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். பின்னர், பிரதமர் மோடியுடன் வந்திருந்த இந்திய அரசு உயரதிகாரிகளை அதிபர் சிறிசேனா கைகுலுக்கி வரவேற்றார். இதனையடுத்து, அதிபர் மாளிகை வளாத்தில் அசோக மரக்கன்றை, பிரதமர் மோடி நட்டு  வைத்தார். பயணத்தில் இலங்கையில் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி  தாயகம் திரும்பினார். இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பின் அங்கு சென்ற முதல் அயல்நாட்டு பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி  தரிசனம் செய்யவுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு வீடு:

இலங்கையில் போர் முடிந்த பின் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மறுவாழ்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் மொத்தம் 60 ஆயிரம் பேருக்கு இலங்கையில் வீடு கட்டி  கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவும் இலங்கையும் சேர்த்து முடித்த திட்டம் ஆகும். இந்திய மத்திய அரசு இதற்காக ரூ.2,418 கோடியை ஒதுக்கீடு செய்து இருந்தது. இதன் மூலம் 47 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டது. மீதமுள்ள வீடுகள்  இலங்கை அரசால் கட்டப்பட்டது. இதில் முதற்கட்டமாக 404 வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் 14-ம் தேதி அளிக்கப்பட்டது. இலங்கை அரசும் மத்திய அரசும் சேர்ந்து இந்த விழாவை நடத்தியது. நுவாரா எலியா நகரில்  இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சியில்தான் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி வீடுகளை காணொளி காட்சி மூலம்  திறந்து வைத்தார்.


Tags : Delhi ,Narendra Modi ,Tamils ,leaders ,Tamil National Alliance , Sri Lankan Tamils, Delhi, and Tamil National Alliance leaders, Prime Minister Modi
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை...