வரும் 12ம் தேதி சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம்

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க உள்ளதாக அதிமுக தகவல் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது பற்றி நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் விவாதிக்க உள்ளனர். அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது பற்றியும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க-வில் கடுமையான குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பதவி கேட்டு தோப்பு வெங்கடாச்சலம் போன்ற எம்.எல்.ஏ-க்கள் கலகத்தை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. இதில், எடப்பாடிக்கும் ஓ.பி.எஸிற்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.

இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது.  மக்கள் செல்வாக்கும் தொண்டர்கள் செல்வாக்கும் உள்ளவர் அ.தி.மு.க தலைவராக வேண்டும். எம்.ஜி.ஆர் உருவாக்கிய இந்தக் கட்சியும் ஆட்சியும் நீண்டகாலம்  நீடிக்க வேண்டும் என்று ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேட்டியளித்திருந்தார்.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என மதுரையில் ராஜன் செல்லப்பா கூறியது போல் கருத்துகளை தெரிவிப்பதால், கட்சிக்குள் சலசலப்பு உருவாகும். என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : AIADMK ,district secretaries ,executive committee meeting ,Chennai , AIADMK, District Secretaries, Meeting
× RELATED அடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல்:...