கொல்கத்தா ரசாயன கிடங்கில் தீ விபத்து

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹவுரா பாலம் அருகே ரசாயன கிடங்கில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவில் ஹவுரா பிரிட்ஜ் அருகே உள்ள ஜகன்னாத் காட் பகுதியில் ரசாயன கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு பல்வேறு வகையான ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இங்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க கடுமையாக போராடின. சுமார் பத்து மணி நேரப் போராட்டத்துக்கு பின்னரே தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்தைத் தொடர்ந்து, ஸ்ட்ராண்ட் பேங்க் ரோடு பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இந்த தீ விபத்தினால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தீப்பிடித்த ரசாயன கிடங்கை பார்வையிட்ட மேற்கு வங்க தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ், தேவையான மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags : Fire accident ,chemical warehouse ,Kolkata , Fire accident
× RELATED ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்...