×

ராமலிங்க ரெட்டி மீண்டும் அமைச்சராகிறார்: கர்நாடக அமைச்சரவை 12ம் தேதி விரிவாக்கம்: சுயேச்சை சங்கர், நாகேசுக்கு பதவி

பெங்களூரு: கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவை 12ம் தேதி விரிவுப்படுத்தப்படுகிறது. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வரும் உள்ளனர். மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தன. இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை ஆபரேஷன் தாமரை மூலம் இழுக்கும் முயற்சியை பாஜ தீவிரப்படுத்தி உள்ளது.

கூட்டணி ஆட்சிக்கு தற்போதுள்ள நெருக்கடியை சமாளிக்க வேண்டுமானால் அமைச்சரவையில் காலியாக இருக்கும் மூன்று இடங்களை நிரப்புவது அவசியம் என்ற கருத்தை காங்கிரஸ் தலைவர்களிடம் முதல்வர் குமாரசாமி கூறினார். முதல்வரின் கோரிக்கையை அக்கட்சி தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதை தொடர்ந்து நேற்று காலை ஆளுநர் வி.ஆர்.வாலாவை நேரில் சென்று சந்தித்து பேசிய முதல்வர் குமாரசாமி, வரும் 12ம் தேதி காலை 11.30 மணிக்கு அமைச்சரவை விஸ்தரிப்பு நடத்த அனுமதிக்கும்படி கேட்டு ஒப்புதல் பெற்றார். அதன்படி, ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடக்கும் விழாவில் மூன்று பேர் பதவியேற்கிறார்கள். ஆளுநரிடம் முதல்வர் குமாரசாமி கொடுத்துள்ள பட்டியலில் மஜத தரப்பில் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் நாகேஷ், சங்கர் பெயர்களும், காங்கிரஸ் தரப்பில் ராமலிங்க ரெட்டி பெயரும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

Tags : Ramalinga Reddy ,minister ,cabinet expansion ,Karnataka ,Shankar , Karnataka
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...