×

அமைச்சர் சண்முகம் புகார்: பாஜகவுடன் கூட்டணியால் தோற்றோம்

வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசினார்.அவர் பேசுகையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேர்ந்தது. விழுப்புரம் மக்களவை தொகுதியில் உள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் எதிர்க்கட்சிக்கு போனது. இதனால்தான் வெற்றி வாய்ப்பு பறிபோனது என பேசினார். அமைச்சரின் இந்த கருத்து கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Shanmugam ,coalition ,BJP , Minister Shanmugam
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...