×

இரட்டை தலைமைக்கு எதிர்ப்பு: ராஜன் செல்லப்பா கருத்தால் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி

திருவில்லிபுத்தூர்: இரட்டை தலைமைக்கு எதிராக ராஜன் செல்லப்பா கூறிய கருத்தால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அளித்த பேட்டி: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என மதுரையில் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதால், கட்சிக்குள் சலசலப்பு உருவாகும். அதனால் கருத்து சொல்ல தயாராக இல்லை. தேனி எம்பியை தவிர, வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லவில்லை என கூறுகின்றனர். அவர்களை யாரும் தடுக்கவில்லை. சட்டமன்றம் கூடியவுடன் அஞ்சலி செலுத்துவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்: புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் காட்டு பகுதியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. 2021 சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு முன் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தாலும், அவர் வீட்டுக்குதான் செல்ல வேண்டும். கட்சியில் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எப்போதும் இடம் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மதுரையை சேர்ந்த எம்எல்ஏ ராஜன்செல்லப்பா அதிமுகவுக்கு ஜெயலலிதா போல ஒற்றை தலைமைதான் வேண்டும். பொதுக்குழு கூட்ட வேண்டும் என கூறி உள்ளார். அதை பற்றி உங்களது கருத்து என்ன?’ என நிருபர்கள் கேட்டபோது, ‘வனத்துறை பற்றி இருந்தால் கேளுங்க. அது அரசியல். பஸ் ஸ்டாண்ட் பக்கம் அல்லது சர்க்யூட்ஹவுஸ் பக்கம் போயிடலாம் தம்பி. இது அரசியல் தளம் அல்ல’ என்றார்.

Tags : Rajan Pradhana , Rajendra Balaji
× RELATED ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித்...