உலக கோப்பை கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி

டான்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 7  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை  நியூசிலாந்து அணி வீழ்த்தியது. டாசில் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள எடுத்தது.  ஆப்கானிஸ்தான் அதிபட்சமாக ஹிஷமுத்துல்லா ஷஹதி 59 ரன்களும், ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் 34 ரன்களும் எடுத்தனர். 173 ரன்கள எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  நியூசிலாந்து அணி 32.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. பொறுமையாக விளையாடிய வில்லியம்சன் 79 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ராஸ் டெய்லர் 48 ரன்கள் எடுத்தார்.


Tags : team ,World Cup Cricket ,New Zealand ,Afghanistan , World Cup Cricket, New Zealand , Afghanistan
× RELATED பெண்களுக்கான உலகக்கோப்பை டி20...