×

காவிரி - கோதாவரி இணைப்பு கண்துடைப்பு: பாஜ அரசுக்கு வைகோ பதிலடி

சென்னை: கோதாவரி நீர் கானல் நீர்தான் என வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை 10.30 மணி விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்தபேட்டி: நீட்தேர்வால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஐந்து மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. மத்திய அரசின் திட்டங்களால் தமிழகத்துக்கு தொடர்ச்சியாக ஆபத்துகள் வருகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தமிழகத்தில் 274 மையங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு தமிழக அரசும் ஆதரவாக செயல்படுகிறது. கோதாவரி தண்ணீர் தமிழகத்துக்கு வந்தால் மகிழ்ச்சிதான் ஆனால் அதை நிறைவேற்றுவார்களா என்ற சந்தேகம் உள்ளது. கோதாவரி தண்ணீர் வரும் என்பதெல்லாம் கானல் நீராகத்தான் போய்விடும். இதெல்லாம் கண்துடைப்பு நாடகம் தான். தமிழகத்தை பாலைவனமாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

மேகதாதுவில் விரைவில் அணைகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பாஜக அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். இதையெல்லாம் கண்டித்துதான் வரும் 12ம் தேதி திமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பங்கேற்கும் மனித சங்கிலி போராட்டம் நடக்க இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த மனித சங்கிலி போராட்டம் நடக்கும். இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

Tags : Kaveri - Godavari ,Vaiko ,state government , vaiko
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...