500 பணியிடங்களுக்கான இளநிலை உதவியாளர் தேர்வில் குளறுபடி: டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. ஆனால், இந்த தேர்வை நடத்துவது யார், தேர்வு விடைத்தாளை திருத்துவது யார் என்று தெளிவாக இதுவரையில் நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இதேபோல், இளநிலை உதவியாளர் பணிக்கான சம்பள விகிதம் எவ்வளவு என்பதையும் நிர்வாகம் அறிவிக்கவில்லை. தேர்வில் இடஒதுக்கீடு முறை குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பல்வேறு குற்றப் புகார்கள் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இளநிலை உதவியாளர் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு நடைபெற உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, தேர்வில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது. இத்தேர்வை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்லலாமா என்பது குறித்தும் டாஸ்மாக் ஊழியர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும், டாஸ்மாக் நிர்வாகம் தெளிவான சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். எனவே, இத்தேர்வை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு கூறினர்.

× RELATED திம்பம் மலை பாதையில் பயணிக்க ...