×

கடலூர் மாணவி திலகவதி கொலை வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடலூர் கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கில்  விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் டி.பவழங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி சுந்தரமூர்த்தியின் மகள் திலகவதியை மே மாதம் 8 ஆம் தேதி மாலை வீட்டிலிருந்தபோது, பேரளையூரைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியதாக, அவரது மைத்துனர் மகேந்திரன்  கூறியுள்ளார்.  திலகவதியை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், திலகவதியின் தந்தை சுந்தரமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மகள் கொலை தொடர்பாக விசாரணை அதிகாரி தன்னுடைய விசாரணையை சுதந்திரமாகவும்,  நியாமான முறையிலும் விசாரணை மேற்கொள்ளவில்லை.  குற்றவாளிக்கு சாதகமாக செயல்படுவதுடன், சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்களையும் குற்றவாளிக்கு சாதகமாகவே ஏற்படுத்தி வருகிறார்.  எனவே, கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய வழக்கை சிபிசிஐடி அல்லது சுதந்திரமான வேறு அமைப்பு விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும்.  பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு அளிக்கும் இடைக்கால இழப்பீட்டு  தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். இதுவரையில் நடந்த விசாரணை தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கருவேப்பிலங்குறிச்சி போலீசார்  திலகவதி மரணம் தொடர்பாக  மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இழப்பீடு வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கடலூர் கலெக்டர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூன் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : student ,Cuddalore ,Tilakawati ,court , Cuddalore student, Thilagavathi murder case, Court
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!