×

வழிகாட்டி மதிப்பு குளறுபடியை சரி செய்யாமல் 13,000 கோடி வருவாயை எட்டுவது எப்படி? பதிவுத்துறை ஊழியர்கள் கேள்வி,.. அமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை

சென்னை: வழிகாட்டி மதிப்பு குளறுபடியை சரி செய்யாமல் 13 ஆயிரம் கோடி வருவாயை எட்டுவது எப்படி? என்பது தொடர்பாக நாளை ஆலோசனை நடக்கிறது.   ஒவ்வொரு ஆண்டும் பதிவுத்துறை சார்பில் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் வருவாய் இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்படுகிறது.  இதை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் பதிவுத்துறை ஐஜி தலைமையில் டிஐஜி, மாவட்ட பதிவாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. இருப்பினும் பிரச்சனைகளில் முழுமையான தீர்வு  ஏற்படவில்லை என்று ஊழியர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். குறிப்பாக, வழிகாட்டி மதிப்பு குளறுபடி காரணமாக தற்போது வரை கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதற்கு தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் வருவாயை பெருக்க வேண்டும் என்று அரசு ஒவ்வொரு ஆண்டும் கூறி வருகிறது என்று சார்பதிவாளர்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில் பதிவுத்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன், கூடுதல் ஆணையர்கள், மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் ஒவ்வொரு மாதத்துக்கும் வருவாய் இலக்கு நிர்ணயிப்பது, இணையதள பதிவில் உள்ள சிக்கல், மேல்முறையீட்டுக்காக காத்திருக்கும் பத்திரப்பதிவு, வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடி உள்ளிட்ட பல்வேறு விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தப்படுகிறது என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : minister ,registrar staff , Guide value, registrar staff, minister
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...