ஒய்எஸ்சிஏ டிராபி ‘டை’ போட்டியில் ‘ஸ்பிக்’ வெற்றி

சென்னை: ஒய்எஸ்சிஏ டிராபி லீக் சுற்றில் ‘டையில் முடிந்த கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்தியதால் ஸ்பிக் அணி வெற்றி பெற்றது. யங் ஸ்டார் கிரிக்கெட் சங்கம் நடந்தும்  50வது ஓய்எஸ்சிஏ டிராபி கிரிக்கெட் போட்டி மே 1ம் தேதி முதல் சென்னையில் நடைப்பெற்று வருகிறது.  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கங்கள் அங்கீகரித்துள்ள கிரிக்கெட் கிளப்கள், வங்கிகள், பெரு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் என நாடு முழுவதிலும் இருந்து 54 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றின் போட்டி ஒன்றில்  ஸ்பிக் ஆர்சி  - பிரகலாத் சிசி அணிகள் மோதின. முதலில் விளையாடிய  பிரகலாத் சிசி அணி 29.3 ஓவர்களில் எல்லா விக்கெட்களும் இழந்து 183 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக  ஏ.வெங்கடேஷ் 54 ரன்களும்,  பிரசன்னா 39 ரன்களும் எடுத்தனர். ஸ்பிக் ஆர்சி அணியின் உதயபிரகாஷ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.தொடர்ந்து களமிறங்கிய ஸ்பிக் ஆர்சி அணி 30 ஓவர்களின் 6 விக்ெகட்கள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது.

ஆனாலும் குறைந்த விக்கெட்களை இழந்திருந்த ஸ்பிக் அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியின் தினேஷ் வேதகுரு 58பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 63 ரன்களும், சுரேந்தர் 42 ரன்களும் எடுத்தனர். பிரகலாத் சிசி அணியின் ராகவேந்திரா 4 விக்கெட்களும், சந்திரசேகர் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.லீக் சுற்றின் மற்றொரு போட்டி ஒன்றில் லயோலா கல்லூரி - ஃபியூட்சர் ஸ்டார் அணிகள் மோதின. அதில் லயோலா கல்லூரி  25 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தார்.  பின்னர் விளையாடிய ஃபியூட்சர் ஸ்டார் அணி 23.5 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162ரன்கள் எடுத்தது. அதனால் ஃபியூட்சர் ஸ்டார் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் லயோலா கல்லூரியை வீழ்த்தியது. இறுதிப்போட்டி ஜூன் 16ம் தேதி நடைபெறும்.

யு14 டென்னிஸ்
சென்னையில் 14வயதுக்கு உட்பட்டவர்களுக்காகன அபி ஷோடெக் ரேங்கிங் டென்னிஸ் போட்டி  நேற்று தொடங்கியது.  இந்தப்போட்டியில் 123 பேர் விளையாட உள்ளனர். இதில் 31 பேர் சிறுமிகள். நேற்று தொடங்கிய தகுதிச்சுற்று போட்டிகள் இன்று முடிகிறது.   முதன்மை சுற்றுப் போட்டிகள் நாளை முதல் நடைபெறும். இதில் தகுதிச் சுற்றில் வெற்றிப் பெற்ற 32 பேர் உட்பட 64 பேர் விளையாடுவார்கள்.

50 அடி கிரிக்கெட் மட்டை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வரும் நிலையில் உலக கிரிக்கெட் ரசிகர்களை ஈர்க்க பல்வேறு வணிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் நடைபெற உள்ளது. வேளச்சேரியில் உள்ள தனியார் சந்தை மாளிகையில் 50 அடி உயர கிரிக்கெட் மட்டை காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இந்த ‘மகா’ கிரிக்கெட் மட்டையை  ஜூன் 14ம் தேதி மாலை முதல் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்படும். இதற்கான தொடக்க விழாவில் ‘இந்திய கிரிக்கெட்டின் அடையாளம்’ கபில்தேவ் பங்கேற்று 50 கிரிக்கெட் மட்டையை திறந்து வைக்கிறார்.Tags : 'SPIC' wins , YCCA Trophy
× RELATED இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்...