மாநில நீச்சல் போட்டி எஸ்டிஏடி டால்பின் சாம்பியன்

சென்னை: மாநில அளவிலான சப்-ஜூனியர், ஜூனியர் நீச்சல் போட்டியில் சென்னையைச் சேர்ந்த எஸ்டிஏடி டால்பின் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு மாநில 36வது சப்-ஜூனியர் மற்றும் 46வது ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை, வேளச்சேரியில் நடைபெற்றது. இந்த போட்டியில்   650 வீரர், வீராங்கனைகள்  பங்கேற்றனர். சிறுவர், சிறுமியருக்கான பட்டர்பிளை, பேக்ஸ்ட்ரோக், ப்ரீஸ்டைல் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைப்பெற்றன,  சிறுவர்கள் பிரிவில் எஸ்டிஏடி டால்பின் அணி 220 புள்ளிகளும், சிறுமியர் பிரிவில் ஆர்கா அணி 216 புள்ளிகளும் பெற்றன. சிறுவர், சிறுமியர் என 2 பிரிவுகளிலும்  சேர்த்து சென்னையை சேர்ந்த எஸ்டிஏடி டால்பின் அணி 346 புள்ளிகளை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு  தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் பரிசுகளை வழங்கினார். விழாவில்  தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க தலைவர் டாக்டர் சடையவேல் கைலாசம், செயலாளர் டி.சந்திரசேகரன், பொருளாளர் கே.டி.முரளிதரன்,  துணை தலைவர்கள் முனியாண்டி, முகுந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : State swimming competition , State swimming competition, SDAD dolphin champion
× RELATED மாவட்ட கபடி போட்டி உறைகிணறு அணி சாம்பியன்