×

உலக கோப்பை கிரிக்கெட்: ஜேசன் ராய் விளாசல்,..106 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி

கார்டிப்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தியது. சோபியா கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்களை குவித்தது.  387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அபாரமாக விளையாடிய இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய் 153 ரன் விளாசி அசத்தினார். பேர்ஸ்டோ 51 ரன்களும், ஜோஸ் பட்லர் 64 ரன்களும், மோர்கன் 35 ரன்களும் எடுத்தனர்.  வங்கதேச அணியில் அபாரமாக விளையாடிய ஷாகிப் அல் ஹசன் 121 ரன்களும், முஷ்பிகுர் ரகிம் 44 ரன்கள் எடுத்தனர்.  



Tags : World Cup Cricket ,Jason Rai ViaSal ,Bangladesh ,squad ,England , World Cup Cricket, Jason Rai, Bangladesh team, England team
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...