×

டூவீலர் ஸ்டாண்டாக மாறிய பழநி பஸ் ஸ்டாண்ட்': பயணிகள் அவதி

பழநி: பழநி பஸ் நிலைய பிளாட்பாரங்களில் டூவீலர்களை நிறுத்துவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இதையொட்டி பழநிக்கு தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பழநி பஸ் ஸ்டாண்டில் எப்போதும் பக்தர்கள் கூட்டமிருக்கும். பஸ் ஸ்டாண்டிற்கு  வரும் பக்தர்கள் மற்றும் பயணிகளிடம் வியாபாரம் செய்ய பிளாட்பாரங்களை ஏற்கனவே கடை உரிமையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள்  ஆக்கிரமித்துள்ளனர்.

பஸ் ஸ்டாண்டுக்கு வருபவர்கள் தங்களது டூவீலர்களை எஞ்சிய பகுதிகளில் நிறுத்தி ஆக்கிரமித்து கொள்கின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டுக்கு வரும்  பயணிகள் வெயில் மற்றும் மழைக்கு கூட ஒதுங்க முடியாமல் அவதியடைகின்றனர்.  நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பழனிச்சாமி கூறுகையில், ‘‘ஆக்கிரமிப்பு வியாபாரிகள் தங்களது கடைகளின் முன்பு பயணிகளை நிற்க  அனுமதிப்பதில்லை. இதனால் பயணிகள் செய்வதறியாது பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பயணிகள் நலன் கருதி,  ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Tags : bus stand ,Palani ,stand ,Passengers , Tourist stand, Palani bus stand, passengers
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை