×

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சாலையோர கடைகளில் சிக்கன் 65, பஜ்ஜி தயாரிப்பு

* உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம்
* உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்குமா?

டெல்டா மாவட்டங்களில் மாலை நேரங்களில் பெரும்பாலான நடை பாதை கடைகளில் பஜ்ஜி போன்ற உணவு பொருட்கள், சிக்கன் 65 விற்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளன. இதை அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக டாஸ்மாக் மதுபான கடை கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகளவில் இந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யக் கூடிய கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் நடை பாதை சிக்கன் 65 கடைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்றாலே, ஒரு வித வாடை வரும். அந்தளவுக்கு சுகாதாரம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் பிரச்னை என்னவென்றால், விற்பனைக்காக சிவப்பு நிறத்தில் பஜ்ஜியும், அதை விட சிவப்பு கலரில் சிக்கன் 65 பொறித்தும் விற்பனை செய்யப்பட்டு வருவதால் அந்த வழியாக நடந்து செல்லக்கூடிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்து உள்ளது.

கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65 மசாலாவை சேர்த்தால், இந்த அளவு சிவப்பு நிறம் வராது. மேலும் பஜ்ஜி லைட்சிவப்பு நிறத்தில் இருக்கும். இவர்கள் செயற்கையாக கலர் அதிகப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் கடைகளில் விற்கும் கலர் பொடியை சேர்க்கின்றனர். இந்த பொடி களை தேவையான அளவு மட்டுமே சேர்க்க வேண்டும். இதில் ஒரு சிலர் தேவைக்கு அதிகமாக கலர் பொடிகளை சேர்த்து பஜ்ஜி மற்றும் சிக்கன் 65 பொறித்து விற்பனை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாடிக்கையாளர்கள் ஈர்க்கும் வகையில் சாலையோர கடைகளில் அதிக கலர் பொடிகள் சேர்த்து பஜ்ஜி, சிக்கன் 65 வியாபாரிகள் விற்பனை ெசய்து வருகின்றனர். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எரிச்சல், அல்சர், செரிமான கோளாறு உள்ளிட்ட வயிறு தொடர்பான உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இது நாளடைவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

டெல்டா மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அதிரடியாக ஆய்வு செய்வதோடு, எந்தெந்த கடைகளில் தடைசெய்யப்பட்ட கலர் பொடிகளை அதிக அளவில் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது என கண்டறிந்து சாலையோர  கடைகளில் பஜ்ஜி, சிக்கன் 65 விற்பனையை தடை செய்ய வேண்டும் என்றனர். தடை செய்யப்பட்ட கலர் பொடிகளை அதிக அளவில் சேர்த்து விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். சாலையோர கடைகளில் விற்பனைக்காக சிவப்பு நிறத்தில் பஜ்ஜியும், அதை விட சிவப்பு கலரில் சிக்கன் 65 பொறித்தும், விற்பனை செய்கின்றனர். இது பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் வாடிக்கை யாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

Tags : customers ,roadside stores , Customer, roadside shop, chicken 65, patties
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...