×

நீடாமங்கலம் அருகே தூர்வாராத பரப்பனாமேடு வாய்க்காலால் சாகுபடி செய்ய முடியாத அவலம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே பரப்பனாமேடு வாய்க்கால் தூர்வாராததால் பல ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்ய முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் பெரிய வெண்ணாற்றிலிருந்து பிரிந்து வந்து நீடாமங்கலம் தஞ்சை சாலையில் கொண்டியாறு என்னும் இடத்திலிருந்து பாசன வாய்க்காலாக கொண்டியாறு சட்ரசிலிருந்து கடம்பூர்,பரப்பனாமேடு பாசன வாய்க்கால் பிரிகிறது.இந்த வாய்க்காலில் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.கிளை வாய்க்கால்கள் கடம்பூர் ,பரப்பனாமேடு பகுதியில் செல்கிறது. இங்கு தஞ்சை மன்சூர் தர்காவிற்கு சொந்தமான சுமார் 140 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுவும் மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக வந்தால் மட்டுமே பாசனம் செய்யப்படும்.

அங்குள்ள சிறு குறு ஆற்றில் தண்ணீர் வராததால் ஒரு சிலர் மின் மோட்டார் வைத்து சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் மணிக்கு ரூ.150 வீதம் தண்ணீர் பெற்று சாகுபடி செய்து வருகின்றனர்.தண்ணீர் கிடைக்காத விவசாயிகள் தண்ணீர் கிடைக்காததால் மின் மோட்டார் உள்ளவர்களிடம் அடகு மற்றும் குத்தகைக்கு விட்டுள்ளனர். சில விவசாயிகளின் நிலத்திற்கு செல்லும் பாசன வாய்க்கால் தூர் வாராததால் சுமார் 6 ஏக்கருக்கும் மேல் பல ஆண்டுகளாக சாகுபடி செய்ய முடி யாமலும்,சிலர் வயல்களில் கருவேல மரங்கள் மண்டியுள்ளதால் முற்றிலும் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பரப்பனாமேடு கிராம தலைவரும் சிறு விவசாயிமான நேரு கூறுகையில், கொண்டியாறு பாசன வாய்க்காலிலிருந்து மான்குளம்,பூசகுட்டை, வீரவநல்லூர்குளம், ஏரிகுட்டை,மாரியம்மன் கோயில் குளம் உள்ளிட்ட குளங்களுக்கு செல்லும் பாசன வாய்க்கால் முழுமையாக தூர்ந்துள்ளது. 6 ஏக்கர் நிலம் கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் கருவேல மரங்கள் மண்டி கிடக்கிறது.குளங்கள் வறண்டு கிடக்கிறது.சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குளங்கள் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர் வாரி சிறு குறு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றார்.

Tags : Parapana Manadu ,river ,Neidamangalam , Nedumangalam, Parambanadadu river, farmers
× RELATED கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்