48 மணி நேரத்தில் மேற்கு உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை: 48 மணி நேரத்தில் மேற்கு உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேற்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று அரபிக்கடல் பகுதியில் வலுவடைந்துள்ளதாகவும், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


× RELATED மக்களின் பிரார்த்தனைக்கு பலனாக...