×

நீட் தேர்வில் வெற்றி மாணவி ஜீவிதாவின் மருத்துவ கல்வி செலவை ஏற்றார் தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை: சென்னையை அடுத்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற அனகாபுத்தூரை சேர்ந்த மாணவி ஜீவிதாவின் மருத்துவ கல்வி செலவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்றுள்ளார். குடும்பச் சூழ்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை செலுத்துவதே கடினம் என்று மாணவியின் குடும்பத்தினர் கவலை தெரிவித்த நிலையில் மாணவியின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவக் கனவு நனவாகட்டும். மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Tags : Soundararjan ,Jeevitha Tamil Nadu , Neat Selection, Student Jvidha, Medical Education Cost, Tamilisai Soundararjan
× RELATED பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது: தமிழிசை சவுந்தர்ராஜன்