×

தொழிலாளி மர்ம மரணம் காவல் நிலையத்தில் சடலத்தை வைத்து உறவினர்கள் முற்றுகை

அண்ணாநகர்: தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது சடலத்தை காவல் நிலையத்தில் வைத்து உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் ராம்குமார் (51). கூலி தொழிலாளி. இவரது சொந்த ஊர் கேரளா. கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி, ராம்குமாரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் 2வது திருமணம் செய்து கொண்டு, வில்லிவாக்கத்தில் ராம்குமார் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ராம்குமார் வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். நேற்று காலை, அவரை மனைவி எழுப்பியபோது, மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி ஆம்புலன்சில் வந்த டாக்டர், பரிசோதனை செய்தபோது ராம்குமார் இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து திரண்ட ராம்குமாரின் உறவினர்கள், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி, சடலத்தை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் வைத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ராம்குமார் மரணம் குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : death ,relatives ,police station , Mystery death
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...