×

மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்ேவறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஜூன் 10ம் தேதி காலை 11 மணிக்கு திருச்சியில் நடக்கும் அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பு விழா, மாலை 6 மணிக்கு திருச்சி மாவட்ட அலுவலகத்தில் கலைஞர் சிலை திறப்பு, மாலை 6.30 மணிக்கு பெரம்பலூர், உழவர் சந்தையில் நடக்கும் கலைஞர் பிறந்தநாள் விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்கிறார். 12ம் தேதி காலை 10 மணிக்கு கோவை, பாப்பநாயக்கன், மீனாட்சி ஹாலில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கோவை மு.ராமநாதன், தீர்மானக்குழு உறுப்பினர் க.ரா.சுப்பையன் ஆகியோர் படத்திறப்பு நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி, வடக்கிப்பாளையம் பிரிவில் கலைஞர் பிறந்தநாள் விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்கிறார்.



Tags : events ,MK Stalin , events , MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...